ஈழக் கலைஞன் மீரா குகனின் புதிய கவிதை வெற்றுத்தாளில் வர்ண சித்திரம்!

மீரா குகன் இவர் இதுவரை நிறைய கவிதைகளையும், கதைகளையும் எழுதியிருக்கிறார். அதோடு இவருடைய படைப்புகளுக்கும் அதிக ரசிகர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் இவர் தற்போது வெற்றுத்தாளில் வர்ண சித்திரம் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

வெற்றுத்தாளில் வர்ண சித்திரம்

வெற்றுத்தாள் வெருந்தரையில்

வெறுமையாய் வெளிச்சத்தில்

வெறுங்கை கொண்டு வரைந்த

வெண் நிறத்தில் ஒரு சித்திரம்

மைவிழி பார்வையில்

மையக்கருத்து புலனில் தெளிவாக

மை தீட்ட முடியாமல்

மையிருட்டில் அடங்கியது மனம்

வர்ணத்தில் தீட்டிய வரைபடமானால்

வசீகர தோற்றம் அன்றோ

வண்ணங்கள் கண் கவரும்

வனப்பு நின் மதி மயக்கும்

நம்பிக்கையின் நட்பு வாழ்க்கை

நகர்த்துவது எம் கையில்

நாளை என்பது இன்றே தான்

நலத்தை நட வேண்டும் விருட்சம் பெற