இளமை இரத்தத்தினை உறிஞ்சும் வெளிநாட்டு வாழ்க்கை! வயது 61 ஆனால்???

வெளிநாட்டு வாழ்க்கை தொடர்பான முழுமையான கஸ்டங்கள் அதனை அநுபவித்தவனுக்கே தெரியும்.

இந்நிலையில் வெளிநாட்டு வாழ்க்கையில் தன்னுடைய குடும்பத்திற்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையினையே தியாகம் செய்துள்ள நல்ல உள்ளங்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்….

அவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது…

போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப இந்தியா வறோம் – வயசு22…

தம்பி படிக்கிறான்,அக்காவுக்கு கல்யாணம் பண்ணனும் எப்படியும் ஒரு 3 அல்லது 4 வருஷம் சம்பாதித்தே ஆகனும் – வயசு24…

அக்கா கல்யாணத்துக்கு வாங்கின கடன அடைக்கனும்,அடுத்து தங்கச்சி கல்யாணம் இருக்கு,தம்பி படிப்பு முடிய ரெண்டு வருஷம் இருக்கு அதனால இன்னும் ஒரு 3 வருஷம் – வயசு26…

தம்பி படிப்பு முடிஞ்சி ஒரு வேலைக்கு போகனும் அதனால இன்னும் ஒரு 2 வருஷம் – வயசு28…
அப்பா அம்மா பொண்ணு பார்க்கறாங்க கல்யாணம் பண்ணனும் அதுக்கு பணம் சேர்க்கனும் அதுக்கு ஒரு 1 வருடம் – வயசு30…

கல்யாணத்துக்கு வாங்கின கடன் எல்லாத்தையும் முடிச்சி ஊரு போகனும் அதுக்கு ஒரு 2 வருஷம் – வயசு32…
பிள்ளைய ஸ்கூல் சேர்க்கனும்,அதுக்கு கொஞ்சம் பணம் சேர்த்து வைக்கனும் அதுக்கு 2 வருஷம் – வயசு34…
ஒரு வீட்ட கட்டி முடிச்சிடனும் இத்தனை வருஷம் இருந்து ஒன்னுமே சம்பாதிக்கல அதுக்கு ஒரு 6 வருடம் – வயசு40…

புள்ளங்க படிக்குது இப்போ ஊருக்கு போக முடியாது பணம் வேணும் அதுக்கு இன்னும் 10 வருஷம் இருந்தே ஆகனும் – வயசு50…

புள்ளங்க படிப்ப முடிக்க இன்னும் 2 வருஷம் இருக்கு அதனால இன்னும் 3 வருஷம் – வயசு53…
புள்ளைகளுக்கு ஒரு வேலை கிடைக்கனும்,பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் அதனால இன்னும் 4 வருஷம் – வயசு57…

கல்யாணம் பண்ணி கொடுத்ததும் மாப்பிள்ளைகளுக்கு ஒரு தொழில் அல்லது ஏதாவது உதவிகள் செய்து கொண்டே இருக்கவேண்டி இருக்கிறது அதனால ஒரு 4 வருடம் – வயசு61…
அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது…

ஆம் பெரும்பாலானவர்களுக்கு இந்த வெளிநாட்டு வாழ்க்கை…இளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரமாகத்தான் இன்னமும் தொடர்கிறது. இதில் தப்பி பிழைது குடும்பத்துடன் வசிப்பவர்கள் சிலரே…