இலங்கை வந்துள்ள பங்களாதேஷின் கடற்படை கப்பல்!

பங்களாதேஷின்  கடற்படை கப்பல் பிஜோய் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள பங்களாதேஷ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கமடோர் சய்ட் மக்சுமல் ஹகீம் கலந்துகொண்டார்.

இக்கப்பலின் கடற்படை சிப்பாய்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர் . நாளை  இக்கப்பல் இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது.