இலங்கை முன்னால் கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அதிரடி துடுப்பாட்ட வீரருமான சனத் ஜெயசூர்யா தற்போது தனது சொந்தக் காலால் நடக்க முடியாத அளவிற்கு பரிதாபமான நிலைக்கு சென்றுள்ளார்.422028_76799651

1996ல் இலங்கை அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் ஒருவர் சனத் ஜெயசூர்யா. துடுப்பாட்டம் மட்டுமில்லாமல் சுழல் பந்தில் அசத்தி சிறப்பான சகல துரை ஆட்டக்காரராக திகழ்ந்தவர்.

தற்போது 48 வயதான ஜெயசூர்யா அண்மை காலமாக முழங்கால் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவை சிகிச்சை முடித்த ஜெயசூர்யா, அவரால் தனது சொந்த காலில் நடக்க முடியாத சூழலில் உள்ளார். மெல்ல, மெல்ல ஊன்றுக்கோள் உதவியால் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றார்.