இலங்கை புகையிரத பயணிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி!

இலங்கை அரசாங்கத்தினால் இலங்கையின் புகையிரத பயணிகளின் நலன்கருதி புதிய இலத்திரனியல் ரயில் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

2020 ஆம் ஆண்டுகளில் இம்மின்சார புகையிரத சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானம் மற்றும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல் கட்டமாக வியாங்கொடயில் இருந்து பாணந்துறை வரையிலும், ராகமயிலிருந்து நீர்கொழும்பு வரையிலும் மருதானையிலிருந்து ஹோமாகம வரையிலும் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்திற்காக 625 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானம் மற்றும் போக்குவரத்து அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.