இலங்கையில் தொழிற்துறை கல்வியை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சியி்ன் வேண்டுக் கோள்!

உலகின் வெற்றிகரமான கல்வி முறை பின்லாந்து நாட்டில் காணப்படுவதால் இலங்கையிலும் தொழிற்துறை கல்வியை  நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென   கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இனிவரும்  காலங்களில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் பாடங்களாகக் குறைத்து, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள ஒன்பது பாடங்களைபல மாற்றங்களுடன் ஆறு பாடங்களாகக் குறைத்தே, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்

பின்லாந்து நாட்டைப் போல, குறித்த நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம், நாட்டின் மாணவர்களது எதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்படுத்த முடியும் எனவும்  அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.