இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினம் இன்று..!!!

இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தின வைபவம் ஒரே நாடு என்ற தொனிப்பொருளில் கீழ் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று காலை இடம்பெறவுள்ளது.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். பிரித்தானிய அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வெட் மற்றும் அவரது பாரியார் விசேட அதிதிகளாக வைபவத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர்கள் இதில் கலந்து கொள்ளுகின்றனர்.

சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இரண்டு விசேட பிரதிநிகள் குழு சுதந்திர வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூவாயிரத்து 500 உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் பைவத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். பொதுமக்களால் இதனை பார்வையிடுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர வைபவம் காலை 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு, சுயாதீன தன்மை ஆகியவற்றுக்காக தமது உயிரை தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவு கூர்வதற்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

 

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 மரியாதை வேட்டுக்கள் தீரக்கப்படும் நிகழ்வும் இடம்பெறும்.

 

ஜனாதிபதி இன்று 9.13 இற்கு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றவுள்ளார். முப்படை, பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் தேசிய கெடற் அணி ஆகியன நடத்தும் மரியாதை அணிவகுப்பு மற்றும் கலாச்சார ஊர்வலமும் இன்றைய தினம்  நடைபெறவுள்ளது