இலங்கையர்களே!இரண்டு மணித்தியாலங்களுக்கு அழைக்க வேண்டாம்!

எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் 6 மணிவரை,  பொலிஸ் அவசர தொடர்பாடல் தொலைபேசி எண் (119) இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணி காரணமாகவே இவ்வாறு இரண்டு மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரத் தொலைத் தொடர்பு வசதி சேவையின் குறைபாடுகளை மேம்படுத்துவதற்காகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசரத் தொலைத் தொடர்பு வசதி சேவையின் குறைபாடுகள் மேம்படுத்தப்படவுள்ளமையினால் இரண்டு மணித்தியாலங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸார், பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.