இறந்து 9 வருடங்களின் பின் வெளியாகியுள்ள மைக்கல் ஜாக்சனின் இரகசியங்கள்!!

கிங் ஆப் பாப், மூன் வாக்கர் என பல புனைப்பெயர்கள் பெற்று பாப் உலக சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர் தான் மைக்கல் ஜாக்சன். தனது காந்த குரலாலும், வித்தியாசமான நடன அசைவுகளாலும் உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருந்தவர் மைக்கல் ஜாக்சன்.

எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அவர்களிடமும் ஏதேனும் குற்றம் குறை இருக்கும். அப்படியாக பல அவதூறு வழக்குகளில் சிக்கியுள்ளார் மைக்கல். அதில் பூதாகரமாக வெடித்தது சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக மைக்கல் ஜாக்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு.

 

பிளாஸ்டிக் சர்ஜரி

மைக்கல் ஜாக்சன் குறித்து இன்னமும் பலரிடம் இருக்கும் சந்தேகம் அவரது சரும நிறம். பெரும்பாலானவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி என்ற வார்த்தை பரிச்சயம் ஆக காரணமே மைக்கல் ஜாக்சன் தான்.

எண்ணற்ற முறை தனது முக நிறத்தையும், அமைப்பையும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மைக்கல் மாற்றியமைத்துக் கொண்டார் என்றும். தனது காதலியின் முகத்தை இவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக் கொண்டார் என்றும் பல கருத்துக்கள் இவரை சுற்றி உலா வந்தன.

z

 

நோய்

தொடர்ந்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட காரணத்தால் இவரது முகம் சிதைய ஆரம்பித்தது. சரும நோய்கள் வந்தன என்றும் தகவல்கள் வெளியாகின.

அதற்கேற்ப ஒருசில முறை முகத்தில் ஆங்காங்க பேண்டேஜ் ஒட்டியபடி வெளியே தோன்றினார் மைக்கல். ஆனால், இதற்க்கெல்லாம் காரணம் பிளாஸ்டிக் சர்ஜரி அல்ல. மைக்கலுக்கு இருந்த ஒரு நோய் தான் என்று இப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

த்ரில்லர் டூ ஹிஸ்டரி

1982ம் ஆண்டு வெளியான மைக்கல் ஜாக்ஸனின் த்ரில்லர் ஆல்பத்திலும், 1995ல் வெளியான ஹிஸ்டரி ஆல்பத்திலும் மைக்கல் ஜாக்ஸனின் தோற்றத்தை கண்டால், இவரா அவர் என வியப்படையச் செய்யும்.

காரணம் த்ரில்லர் ஆல்பத்தில் கருப்பாக இருக்கும் ஜாக்ஸன். ஹிஸ்டரி ஆல்பத்தில் பால் நிறத்தில் வெள்ளையாக இருப்பார். இது ஒரே நாளில் தோன்றிய மாற்றம் அல்ல. கிட்டத்தட்ட 13 வருட இடைவேளையில் இவரது சருமம் மெல்ல, மெல்ல வெள்ளையாக தொடங்கியது.

x

 

வெண்புள்ளி நோய்

சிலருக்கு சருமத்தில் வெள்ளை புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். மெல்ல மெல்ல உடல் சருமம், முக சருமம் முழுக்க வெள்ளையாகி விடும் இதை ஆங்கிலத்தில் Vitiligo என்று கூறுவார்கள்.

வெள்ளையாக இருக்கும் நபர்களை காட்டிலும், கருப்பாக இருக்கும் நபர்களின் உடலில் இது நன்கு வெளிப்படும். ஆரம்பக் கட்டத்திலேயே இவருக்கு இந்த நோய் ஏற்பட்டுவிட்டது என்று அறிந்தும் விடலாம்.

லூபஸ் எரித்ஹமெட்டோசஸ்! வெண்புள்ளி நோய் மட்டுமின்றி, இந்த நோய் காரணமாக மைக்கல் ஜாக்ஸனுக்கு லூபஸ் எரித்ஹமெட்டோசஸ் ( lupus erythematosus) என்ற இன்னொரு நோய் தாக்கமும் இருந்தது.

இது ஒரு நபரின் சருமத்தை சிவக்க செய்யும். அதாவது, வெள்ளையாக இருந்தால், அவரது உடலில் ஆங்காங்க சரும நிறம் மிக சிவந்து காணப்படும். இதனால், அந்த நபரின் சரும நிற தன்மையானது மிகையாக பாதிக்கப்படும்.

4

 

1993

1993ல் வெளிப்படையாக தனக்கு ஒரு பாதிப்பு இருக்கிறது என மைக்கல் ஜாக்ஸன் முதன் முறையாக கூறியிருந்தார். ஆனால், அப்போது பலருக்கும் மைக்கல் இப்படி ஒரு பிரச்சினையில் அவதிப்பட்டு வருகிறார் என்று தெரியாது.

ஒரு பேட்டியில் மைக்கல் ஜாக்ஸன், “சில சமயம் நம்மால் எதையும் மாற்ற முடியாது, உதவி பெறவும் முடியாது, சில சமயம் உண்மை அறியாமல் மக்கள் எழுதும் கட்டுரைகள் என்னை மிகவும் புண்பட வைக்கிறது. இது எனக்கு இருக்கும் ஒரு பிரச்சினை. என்னால் இதை கட்டுப்படுத்த முடியாது.” என்று கூறியிருந்தார்.

 

1984

1984ல் தான் முதல் முறையாக அர்னால்ட் கிளெயின் எனும் சிறப்பு சரும சிகிச்சை மருத்துவரால் மைக்கலுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது என பரிசோதனை செய்து கண்டறியப்பட்டது.

அப்போதிருந்தே அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும் சிலர் இது யாவும் பொய் என்றும், அப்படி ஒரு நோய் மைக்கலுக்கு இல்லை என்றும், அவர் தனது சருமத்தை அதிகமாக ப்ளீச் செய்து கொண்டே இருந்தார். மேலும், தான் வெள்ளையாக வேண்டும் என்பதற்காக நிறைய மருத்துவ பானங்களை பருகி வந்தார் என்றும் சிலர் கூறியுள்ளார்கள்.

மேலும், தனது புருவம், கண் இமைகள், இதழ் மற்றும் மூக்கு பகுதிகளில் பலமுறை பெரியளவிலான பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்து கொண்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

பிரதே பரிசோதனை

மைக்கல் ஜாக்சன் இறந்த பிறகு அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ரோஜர் ஜாக்ஸனுக்கு வெண்புள்ளி நோய் இருந்தது உண்மை தான்.

அவரது முகம், மார்பு, வயிறு மற்றும் தோள் பகுதிகளில் அதற்கான அறிகுறிகள் இருந்தன என்று தெரிவித்துள்ளார்.

 

மேக்கப்

இந்த வெண்புள்ளிகள் வெளிப்பட தொடங்கிய பிறகு மைக்கல் தனது தோற்றத்தில் அதிக மேக்கப் செய்துக் கொண்டதை நீங்கள் அவரது நிகழ்ச்சி வீடியோக்களில் கூட பார்க்கலாம் என்றும், அவரது கருமை சருமத்தில் இவை வெளிப்படையாக தோன்றியிருக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு தருணத்தில் வெண்புள்ளிகள் அதிகரிக்க தொடங்கிய போதே ஜாக்சன் சருமத்திற்கு ப்ளீச்சிங் செய்ய ஆரம்பித்திருக்க வேண்டும். ஏனெனில், யாருக்கும் தெரியாமல் தினமும் அதிகமாக மேக்கப் செய்துக் கொள்வது என்பது கடினமான செயல் என்றும் மருத்துவர் ஹனீஸ் பாபு கூறியுள்ளார்.

 

ஆடை

இதன் தாக்கம் அதிகரிக்க தொடங்கிய பிறகே, மைக்கல் ஜாக்சன் தனது உடல் கொஞ்சம் கூட வெளியே தெரியாதபடி உடை உடுத்த தொடங்கியுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, வெளி நிகழ்ச்சிகளுக்கு வந்தாலும் முகம் மட்டுமே தெரியும்படி பார்த்துக் கொள்வார். கேப், கையுறை, ஷூ என அவர் எப்போதும் முழு உடல் மறைத்தப்படியே இருந்ததற்கு இது தான் காரணம் என்றும் கூறுகிறார்கள்.

4

 

இரண்டாம் மனைவி

மைக்கல் ஜாக்சன் இரண்டாம் திருமணம் செய்துக் கொண்ட டெப்பி ரோவ் என்பவர் ஒரு சரும மருத்துவர். இவருடன் ஏற்பட்ட வேகமான நட்பே இவர்களை திருமண பந்தத்தில் இணைய வைத்தது.

ஆயினும், திருமணமான மூன்றே வருடங்களில் இவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

 

டாட்டூ

மைக்கல் ஜாக்சனின் உடலில் பிரேத பரிசோதனை செய்த போது, அவர் தனது இதழ்களை பிங்க் நிறத்திலும், புருவங்களை கருப்பு நிறத்திலும் டாட்டூ செய்திருந்தது அறியப்பட்டது. இதற்கும் அந்த வெண்புள்ளி நோய் தாக்கம் தான் காரணமாக இருக்க வேண்டும்.

 

இறக்கும் போது மைக்கல் ஜாக்சனின் உயரம் 5’9, உடல் எடை 136 பவுண்டுகள் இருந்தன. அவர் உட்கொண்டிருந்த வலி நிவாரண மருந்து அவரது வயிற்றில் செரிமானம் ஆகாமல் அப்படியே இருந்தன என்றும் தகவல்கள் கிடைத்தன.