இயேசுவின் முதல் வருகை!

இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையை பற்றி, இயேசு கிறிஸ்து உலகத்தில் பிறப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னமே தீர்க்கதரிசிகளால் முன்னுரைக்கப்பட்டது. இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் (ஏசா.7:14) என்றும், எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக் குள்ளே, சிறியதாயிருந்தாலும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திருந்து புறப்பட்டு வருவார் (மீகா.5:2) ஒரு நட்சத்திரம் யாக்கோலிருந்து உதிக்கும்.

Image result for இயேசு

ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும் (எண்.24:17) என்ற தீர்க்கதரிசிகளின் தீர்க்க தரிசனத்தின்படியே, இயேசு கிறிஸ்து யூதேயாவிலுள்ள பெத்லகேமில் குறித்த காலத்தில் ஒரு கன்னி மரியாளிடம், ஏழைக் கோலமாக இந்த உலகத்தில் மனிதனாக பிறந்தார்.

Image result for இயேசு

ஆனாலோ, அவர்தான் இயேசு கிறிஸ்து என்று உலகம் அறியாமல், அவரை சிலுவையில் அறையும்படியாகவும், அவருடைய இரத்தத்தை சிந்தும்படியாகவும் ஒப்புக்கொடுத்தனர். இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையைப் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்த அதே தீர்க்கதரிசிகள், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை பற்றியும் தீர்க்கதரிசனங்களாக உரைத்துள்ளனர்.

இயேசு கிறிஸ்துவின் முதலாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எல்லாம் எப்படி நிறைவேறியதோ, அப்படியே இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றிய தீர்க்கதரிசனங்களும் நிறைவேறும் என்பதற்கு எந்தவித சந்தேகமும் இல்லை என்பதை திட்டவட்டமாக அறியலாம்.

Image result for இயேசு

எத்தனையோ மதகுருமார்களும், மகான்களும் இந்த உலகத்தில் தோன்றி, வாழும்படியாகவும், ஆளும்படியாகவும் தோன்றினார்கள். ஆனால் நம்முடைய இயேசு கிறிஸ்து மனுக்குலத்தை இரட்சிக்கும்படியாகவே இந்த பூமியில் வந்தார்.