இம்மாதம் 3,645 பேருக்கு ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்

இம்மாதம் 20ஆம் திகதி கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியாகும் 3,645 பேர்களுக்கு நியமனம் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது. இதில் 1,200பேர் மாத்திரமே தமிழ் மொழியில் நியமனம் பெறுவோர் ஆவர்.

 

அது மட்டுமன்றி நாட்டில் பல பாகங்களில் தமிழ் மொழி கணித, விஞ்ஞான பாட ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றது. விசேடமாக சபரகமுவ இரத்தினபுரி பிரதேசங்களில் கணித, விஞ்ஞான பாட ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருகின்றது.

 

இரத்தினபுரியில் பெரும்பாலான பாடசாலைகளில் கணித பாடங்கள் ஏனைய பாடங்களில் நியமனம் பெற்ற ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். அது மற்று மன்றி கணித, விஞ்ஞான பாட நியமனம் பெற்று கற்பிக்கும் ஆசிரியர்கள் பயிற்றப்பட்ட ஆசிரியர்களே ஆவர்.கணித பாடத்தில் பட்டம் பெற்று கற்பிக்கும் ஆசிரியர்கள் இரத்தினபுரியில் குறைவாகவே உள்ளனர். மாணவர்களின் கணித அடைவு கா.பொத (ச/த) தில் அதிகரித்து கொள்வதற்கு ஏனைய பாட ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து அதிகரித்தின்ற போதும் தமிழ் மொழியில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் மாணவர்களுக்கு கற்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போகின்றன.

 

திறமையுடன் பண பலம் இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே வெளி இடங்களுக்கு சென்று உயர் தர பிரிவில் கணித,விஞ்ஞான பிரிவுகளில் கற்பதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது. ஏனைய மாணவர்கள் கலைப் பிரிவில் மன உலைச்சலுடனே கல்வி கற்கின்றனர். இரத்தினபுரியில் சகல வசதிகளுடனும் ஆசிரியர், பௌதீக வளங்களுடனான உயர்தர கணித, விஞ்ஞான பிரிவில் பாடசாலை ஒன்றை திட்டமிடுமாறு கல்வி அமச்சரிடம் வேண்டுகிறனர்.

 

லங்காபுரி ஆசிரியர்  நுஸ்ஸாக்