இன்றைய ராசி பலன் 08/01/2017

http://alphatutorialcollege.org/Buy-Cialis-100-mg-cheap Buy Cialis 100 mg cheap January 7, 2017 இன்றைய ராசிபலன், ராசி பலன் Leave a comment 953 Views

  • மேஷம்

    மேஷம்: மதியம் மணி 3.00 வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். மாலைப் பொழுதிலிருந்து தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். மதியம் மணி 3.00 முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். மதிப்புக் கூடும் நாள்.

  • கடகம்

    கடகம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரபலங்களால் ஆதாய மடைவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு நீங்கள் சென்று வருவீர்கள். உங்கள் நட்பு வட்டம் விரியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • கன்னி

    கன்னி: மதியம் 3.00 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்ப தால் எதையோ இழந்ததை போல் இருப்பீர்கள். உங்கள் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

  • துலாம்

    துலாம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. மதியம் 3.00 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: யதார்த்தமாக பேசி மற்றவரை கவர்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை நீங்கள் உணர்வீர்கள். அரசால் உங்களுக்கு அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். கனவு நனவாகும் நாள்.

  • மகரம்

    மகரம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: தைரியமாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.