இன்றைய ராசிபலன் 12/01/2017

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். உடல் நலம் சீராகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: இரவு 8.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள்.

  • கடகம்

    கடகம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். இரவு 8.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். இனிமையான நாள்.

  • கன்னி

    கன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: இரவு 8.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • தனுசு

    தனுசு: இரவு 8.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பிரச்னை வந்து நீங்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

  • மகரம்

    மகரம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். கனவு நனவாகும் நாள்.

  • மீனம்

    மீனம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க  யோசிப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்