இன்றைய போட்டியின் போது தோனி என்ன சொன்னார்?

http://onlinerx365.com/viagra_with_duloxetine_generic.html|http://onlinerx365.com/viagra_with_duloxetine_generic.html January 10, 2017 விளையாட்டு செய்திகள் Leave a comment 194 Views

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நீலச் சீருடையில் தோனி தனது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார்.

இன்று டாஸ் சென்ற போது எல்.சிவராமகிருஷ்ணனிடம் தோனி கூறும்போது, “இது எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டி, கேப்டனாக (இந்தியா) எனது கடைசி போட்டி, ஆனால் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன், ஜார்கண்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது” என்று தோனி கூறியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து கேப்டன் பதவியைத் துறந்த தோனி இத்தனை ஆண்டுகளாக தனது பேட்டிங்கை கட்டுப்படுத்தும் சுமையை இறக்கி வைத்தது மூலம் சுதந்திரமாக தனது பழைய அதிரடி பாணிக்குத் திரும்புவார் என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பிரபர்ன் மைதான பயிற்சி ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி மிக மந்தமாகத் தொடங்கி 17 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. ராயுடு 18 ரன்களுடனும், ஷிகர் தவண் 55 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 34 ரன்களையும் எடுத்து ஆடி வருகின்றனர்.