இன்று 3:00 மணியளவில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்…!

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று பிற்பகல் 3:00 மணியளவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

மேலும், 2020 -ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை வெற்றி கொள்ள வேண்டுமாயின் பிரதமர் கட்சி தலைமைத்துவத்திலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரவை தகுதியுள்ள அமைச்சர்களிடம் அலரி மாளிகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.