இன்று மைத்திரிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

ஆறு வரு­டங்கள் (2021 வரை ) தன்­னால்­    ஜ­னா­தி­பதி பத­வியில் இருக்க முடி­யுமா என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர்  நீதி­மன்­றத்திடம் அபிப்­பி­ராயம் கோரி­யுள்ள நிலையில் அதனை ஆராய்­வ­தற்­காக      ஐவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்கள் குழு         பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

இன்­றைய தினம் திறந்த நீதி­மன்றத்தில் இந்த விவ­காரம் விவா­திக்­கப்­ப­ட­வுள்ள நிலையில், வாதப் பிர­தி­வா­தங்­களை ஆராய்ந்து       தீர்­மா­னிக்க, பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப்                      தலை­மை­யி­லான ஐவ­ர­டங்­கிய உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர்கள் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தம நீதி­யரசர் இந்த குழுவை நிய­மித்­துள்ளார். பிர­தம நீதி­ய­ரசர் பிரி­யசாத் டெப் இக்­கு­ழு­வுக்கு தலைமை வகிப்­ப­துடன் உயர் நீதி­மன்றின் சிரேஷ்ட நீதி­ய­ர­சர்கள் நால்வர் அதில்                  உள்வாங்­கப்­பட்­டுள்­ளனர்.

அதன்­படி உயர் நீதி­மன்றின் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு அடுத்த படி­யாக சிரேஷ்­டத்­து­வத்தில் முன்­னி­லையில் உள்ள நீதி­ய­ரசர் ஈவா வண­சுந்­தர, நீதி­ய­ரசர் புவ­னேக அனுவி­ஹார, நீதி­யரசர்          கே.ரி.சித்­ர­சிறி, நீதி­ய­ரசர் சிசிர டி ஆப்றூ ஆகி­யோரே குறித்த ஐவர் கொண்ட குழுவின் ஏனைய அங்­கத்­த­வர்­க­ளாவர்.

இந்த விடயம் இன்று முற்­பகல் 11 மணிக்கு உயர் நீதி­மன்றில் ஆரா­யப்­படும் நிலையில், சட்ட மா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய உள்­ளிட்ட அர­சியல் விவ­காரம் தொடர்­பி­லான உயர் சட்­ட­வா­திகள், சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலைவர், செய­லாளர் உள்­ளிட்ட அதில் அங்கம் வகிக்கும் விரும்­பிய உறுப்­பி­னர்கள் தமது கருத்­துக்­களை பதிவு செய்­ய­வுள்­ளனர்.

நீதிமன்றில் பதிவு செய்­யப்­படும் கருத்­துக்­களை ஆராய்ந்து பிர­தம நீதி­யரசர் தலை­மை­யி­லான ஐவர் கொண்ட குழு, ஜனா­தி­பதி மைத்­தி­ரியின் பதவிக் காலம் 5 வரு­டங்­களா அல்­லது 6            வரு­டங்­களா என தீர்­மா­னிக்­க­வுள்­ளது.

இன்று விருப்­ப­மான சட்­டத்­த­ர­ணிகள் சங்க உறுப்­பி­னர்கள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­காலம் 5 வரு­டங்­க­ளாக மட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்­டுமா அல்­லது 6 வரு­டங்­க­ளாக அமைய வேண்­டுமா என்­பது குறித்து சார்­பான மற்றும் எதி­ரான வாதங்­களை முன் வைக்க முடியும் என தமது சங்க உறுப்­பி­னர்­க­ளுக்கு இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் ஏற்­க­னவே              அறி­வித்­துள்­ளது.

கடந்த 2015 ஜன­வரி மாதம் 9 ஆம் திகதி     அர­சி­ய­ல­மைப்பின் 32 (1) ஆம் சரத்தின்     பிர­காரம் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டார்.

அன்­றைய திக­தியில் குறித்த சரத்தின் பிர­காரம் ஜனா­தி­பதி ஒரு­வரின் பதவிக்காலம் 6 வரு­டங்கள் என சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஜனா­தி­பதி, 2015 மே 15 ஆம் திகதி நிறை­வேற்­றப்­பட்ட 19 ஆவது        அர­சியல் திருத்­தத்தின் பிர­காரம், அர­சி­ய­ல­மைப்பின் 30 ஆம் சரத்து திருத்­தப்­பட்­ட­தா­கவும், அதன்­படி இலங்கை ஜன­நா­யக சோச­லிஷ குடி­ய­ரசின் ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லத்தை 19 ஆம் திருத்தத்தின் 3 (2) ஆம் பிரி­வூ­டாக திருத்தி 5 வரு­டங்கள் என மட்­டுப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

அந்­த­ வ­கை­யி­லேயே 19 ஆம் திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பதவிக்கு வந்த தன்னால், அரசியலமைப்பின் பழைய ஏற்பாடுகள் பிரகாரம் 6 வருடங்கள் பதவியில் நீடிக்க முடியுமா ? அல்லது தானும் 5 வருடங்கள் மட்டுமே பதவி வகிக்க வேண்டுமா என உயர் நீதிமன்றின் அபிப்பிராயத்தை அவர் கோரியுள்ளார். இன்று இந்த விவகாரம் விசாரணைக்கு வருகின்றது.