இன்று அதிகாலை உடரட்ட மெனிக்கே தடம்புரண்டது…

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ‘உடரட்ட மெனிக்கே’ ரயில் ஹட்டன் – ரொசல்ல பகுதியில்  இன்று அதிகாலை 5.41 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

சேதமடைந்த ரயில் பெட்டிகளை அகற்றி ரயில் கொழும்பு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த ரயிலின் பெட்டி ஒன்று இவ்வாறு தடம்புரண்டுள்ளதோடு, இதனால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ரயில் பாதை வழமைக்கு திரும்பும் வரை மலையக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.