இந்த கொடூர அரக்கிகளையெல்லாம் என்ன பண்ணலாம்?

சீனாவில் பெண் ஒருவர் இரக்கமின்றி குழந்தை மேல் வாகனம் ஏற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

குவாங்டாங் நகரத்தில் இக்கொடூர சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

குறித்த வீடியோவில் ஒரு சிறுமி ஒருவர் குழந்தை ஒன்றை பெண்ணிடம் இருந்து காப்பாற்ற தரையில் இழுத்துச்செல்கிறார்.

எனினும் இரக்கமற்ற பெண் ஸ்கூட்டரை குழந்தையின் கால் மீது ஏற்றுகிறார்.

இச்சம்பவம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைக்கண்ட பலர் அந்த பெண்ணை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 5 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் சம்பவத்தில் ஈடுப்பட்ட பெண்ணை பொலிசார் கைது செய்து விசாரணை காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.