இந்திய கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை காமிக் புத்தகமாக வெளியீடு – “தி வெல்”(THE WALL)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் கிரிக்கெட் வாழ்க்கை காமிக் புத்தகமாக வெளிவரவுள்ளது.

காமிக் புத்தகங்கள் நட்சத்திரங்களை சூப்பர் ஹீரோக்காளாக வடிவமைக்கின்றன. சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் வரிசையில் இனி இந்திய கிரிக்கெட் அணியின் ராகுல் டிராவிட்டையும் காணலாம்.

201712171338132188_Commentary-is-Great-but-Coaching-Gives-me-Fulfilment-Rahul_SECVPFUntitled-12

 

டிராவிட்டின் கிரிக்கெட் வாழ்க்கை வரலாற்றில் இருந்து சில பகுதிகளை எடுத்து காமிக் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை டிராவிட் ரசிகர்கள் வடிவமைத்துள்ளார். இந்த புத்தகத்திற்கு ‘தி வால்’(THE WALL) என பெயரிட்டுள்ளனர். இந்தப்புத்தகம் ஜனவரி 20ம் திகதி முதல் விற்பனையை தொடங்குகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், டிராவிட்டின் 16 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையை ஆராய்ந்து அதில் இருந்து சிறந்த தருணங்களை தேர்வு செய்தோம்.

அதில் சிறந்த 15 தருணங்களை தேர்வு செய்து அதனை பயன்படுத்தியுள்ளோம். இந்த புத்தகத்தை வரும் 20ஆம் திகதி சென்னையில் வெளியிடவுள்ளோம்.
உலகம் முழுவதும் டிராவிட்டின் காமிக் புத்தகங்கள் கிடைக்கும் என தெரிவித்தனர்.

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த பொக்கிஷம். வலதுகை பேட்ஸ்மேனான இவர் இந்திய அணியின் பல்வேறு வெற்றிகளுக்கு முதுகெலும்பாக இருந்துள்ளார்.

ஷேவாக், சச்சின், கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் போன்றோருடனான இவரது கூட்டணி கிளாசிக் ரகம். பொறுமை, அலட்டிக்கொள்ளாத ஆட்டம், அமைதியான அனுகுமுறை போன்றவை டிராவிட்டின் அடையாளம்.

டிராவிட் காமிக் புத்தகம் மூலம் தங்களுக்கு பிடித்த ஹீரோவின் நினைவுகளை அவரது ரசிகர்கள் மீண்டும் அசைப்போடுவர்.