இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் கூறிய இலங்கை வீரர்!

டெல்லியல் நடைபெற்ற இலங்கை- இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்  முடிந்த நிலையில் 1-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

மூன்றாவது போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் இலங்கை தலைவர் தினேஷ் சண்டிமால்,செய்தியாளர்களிடம் கூறுகையில் திறமையான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கடினமான நிலையிலும் தனஞ்செயவும், ரோஷனும் சிறப்பாக விளையாடினார்கள்.

மாசு ஏற்பட்ட விடயத்தை பொருத்தவரை இலங்கையில் இது போன்று நாங்கள் அனுபவித்ததில்லை என்பதால் முதல் இரண்டு நாள் திணறினோம். கடைசி நாள் சிறப்பாக இருந்தது.

எங்களுக்கு ஆதரவளித்த இந்திய ரசிகர்களுக்கு நன்றி. தென் ஆப்பிரிக்க தொடரில் சிறப்பாக செயல்பட இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார்.