இந்தியாவில் ஒரு குட்டி சுவிட்சர்லாந்துக்கு போவோமா?

வட இந்தியாவில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் என்றால் நமக்கு சிம்லா, டார்ஜீலிங் போன்ற இடங்கள் தான் நியாபகத்திற்கு வரும்.

இவற்றை போலவே ஓர் முக்கிய சுற்றுலா தளம் தான் ஹஜ்ஜியர்.

Image result for இந்தியாவில் ஒரு குட்டி சுவிட்சர்லாந்து

இமாச்சல பிரதேச மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ளது ஹஜ்ஜியர்.

சம்பாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலமான டல்ஹவுசியில் இருந்து சுமார் 24 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

ஹஜ்ஜியர் சுற்றிலும் பசுமையான புல்வெளிகளாலும் அடர்ந்த காடுகளாலும் சூழப்பட்டு மிக ரம்மியமாக காட்சியளிக்கிறது.

மேற்கு இமயமலையின் டவுலாடர் சரிவுகளில் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலம் கடல் மட்டத்தில் இருந்து 6500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மேலும் ஏரி ,மேய்ச்சல் நிலம், காடு ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பட்ட இயற்கை சூழலையும் நாம் இங்கே காணலாம்.

Image result for இந்தியாவில் ஒரு குட்டி சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தை சேர்ந்த வில்லி ரி பிலேஸர் என்பவர் உலக சுற்றுலா வரைப்படத்தில் ஹஜ்ஜியரை மினி சுவிட்சர்லாந்து என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஹஜ்ஜியர் சுவிட்சர்லாந்து தலைநகர் பெர்னிலில்(Bern) இருந்து 6194 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது என்பதை குறிக்கும் விதமாக இங்கு சுவிட்சர்லாந்து 6194 கிலோமீற்றர் என்ற பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் சுவிட்சர்லாந்தை போன்றே புவி அமைப்பை கொண்ட 160 இடங்களில் ஒன்றாகவும் ஹஜ்ஜியர் விளங்குகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள்

Image result for இந்தியாவில் ஒரு குட்டி சுவிட்சர்லாந்து

இங்கு உங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. முக்கியமாக எந்த தொந்தரவும் இல்லாமல் மனதுக்கு அமைதி தரும் இங்குள்ள மலைச்சரிவுகளிலும் அடர்ந்த காடுகள் வழியாக நடந்துசெல்வது என்பதே தனி சுகம் தான்.

டவுலாதார் மலைத்தொடர்

இமயமலைத்தொடரின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு கிளைத்தொடர் தான் இந்த டவுலாதர் மலைத்தொடர்.

இங்குள்ள அடர்ந்த மூங்கில் , பைன் மற்றும் பசுமையான புல்வெளிகள் முக்கிய அம்சமாகும். மேலும் ஹஜ்ஜியர் கோடைஸ்தலம் டவுலாதர் மலைத்தொடர்களில் அடிவாரத்தில் அமைந்துள்ளதால். இந்த மலைகளின் முழு அழகையும் பார்த்து ரசிக்கலாம்.

ஹஜ்ஜியர் ஏரி

சுற்றிலும் பசுமையான புல்வெளிகள் அமைந்திருக்க நடுவில் ஒரு குட்டி தீவுபோல் இந்த ஹஜ்ஜியர் ஏரி அமைந்துள்ளது.

கோடைகாலங்களில் பச்சை பட்டாடை உடுத்தியது போலவும் , பனி காலங்களில் ஏரி முழுவதும் பனி படர்ந்து அழகாகவும் மனதுக்கு இன்பம் தரும் விதமாகவும் இந்த ஏரி காட்சியாளிக்கும்.

ஹஜ்ஜிநாக் கோயில்

ஹஜ்ஜியர் ஏரியில் இருந்து சில நிமிட பயணங்களில் நம்மை வரவேற்கிறது 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்மிக்க ஹஜ்ஜி நாக் கோயில். இந்த கோயிலில் மண்டபத்தில் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் ஆகியோரின் ஓவியங்களை நாம் பார்க்கலாம்.

மேலும் இந்த கோயிலின் கருவறை, மரக்கட்டைகளில் இருந்து மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டு பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும்.

இவை தவிர மலையேற்றம், குதிரை சவாரி போன்றவையும் இங்கு முக்கிய அம்சமாக விளங்குகிறது.

இங்கு இமாச்சல அரசின் சார்பில் ஒரு ஹொட்டல் மற்றும் குடில்கள் உள்ளன. மேலும் வனத்துறை சார்பில் இரண்டு விடுதிகள் உள்ளன.

சுவிட்சர்லாந்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஹஜ்ஜியார் சென்று வந்தால் அந்த ஆசை நிறைவேறும்.