இந்தியாவின் முதல் பிரதமரின் 128-வது பிறந்தநாள்.

நேரு , 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி, உத்தர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் பிறந்தார். ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றார். நேருவின் பிறந்த நாள், நாடு முழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜவஹர் லால் நேருவின் 128-வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு இன்று 128வது பிறந்த தினமாகும். நேருவின் பிறந்த நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம், முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேருவின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் மரியாதை செலுத்தினார்.

பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணத்தில் உள்ள பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், நேருவுக்கு மரியாதை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டரில், ஜவஹர்லால் நேருவின் 128 வது பிறந்த நாளையொட்டி அவரை நினைவு கூர்வதாகவும், தேசத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மறக்க முடியாதது எனவும் குறிப்பிட்டுள்ளார்