இதோ! நமீதாவின் திருமணப் பத்திரிகை

 

தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகள் என்று யோசித்தால் ஞாபகம் வரும் முகங்களில் நமீதாவும் ஒருவர்.

இவர் சினிமாவிற்கு அறிமுகமான நேரத்தில் இவருக்கு பல படங்களில் முக்கிய வேடங்களும் கிடைத்தது. ஆனால், கடந்த சில வருடங்களாக அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லை.

மேலும் தற்போது இவர் வீரேந்திர சௌத்ரி என்ற மாடலிங் தொழில் உள்ள ஒருவரை திருமணம் செய்வதாக ஒரு வீடியோ மூலம் அறிவித்தார்.

இவர்களுக்கு 24 ஆம் தேதி திருமணம் என்று கூறினார்கள். இந்நிலையில் இவர்களது திருமணப் பத்திரிக்கை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நவம்பர் 22-ம் தேதி மாலை வரவேற்பும், நவம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோவிலில் திருமணமும் நடைபெற உள்ளது.