இணக்கப்பாட்டுக்கு வந்த ஜனாதிபதி – பிரதமர்…!

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒரு சில விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

கலந்துரையாடல் பின்னர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ,ஜனாதிபதியின் தரப்பினரும், பிரதமரின் தரப்பினரும் விசேட குழுவொன்றை நியமித்து எப்படி நல்லாட்சி அரசாங்கத்தை தொடர்ந்து நடத்தி செல்வது என்பது தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வந்தனர். என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியிலிருந்து விலகிச் செல்வார் என்றும் அதிகம் பேசப்பட்ட நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கப்பாட்டுடன் நல்லாட்சி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.