இட்லி-சாம்பாரின் நன்மை தெரியுமா?

நாம் என்னதான் பீட்ஸா, பர்கர் என்று போனாலும், இந்த இட்லி சாம்பார்க்கு இணையான ஒரு காலை உணவை நாம் கண்டதில்லை. இந்த இட்லி-சாம்பாரைப் பற்றி நீங்கள் அறியாத விஷயங்களை சில இங்கே.

உலக சுகாதார அமைப்பு (WHO) உள்ளிட்ட பல்வேறு சுகாதார அமைப்புகள் இட்லி சாம்பாரை ஆரோக்கியமான உணவாக அங்கீகரித்துள்ளன.

இட்லியில் இருக்கும் உளுந்து, அரிசி போன்றவை அத்தியாவசிய வைட்டமின்கள், மினரல்கள், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

மற்ற உணவுகளைப் போல இட்லியில் எண்ணெய் சேர்க்கப்படுவதில்லை. சாம்பாரிலும் குறைந்த அளவே எண்ணெய் சேர்க்கப்படுகிறது. இதனால் உடல் பருமனைக் கட்டுப்படுத்த மிக உதவியாக உள்ளது.

பலவகையான காய்கறிகள் சேர்க்கப்பட்டு செய்யும் சாம்பாரில் பருப்பு, மஞ்சள் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால் சுவையுடன் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றன. இட்லி மற்றும் சாம்பார் இரண்டிலும் நமக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும், மற்ற உணவுகளைப் போல் அல்லாமல், இதை காலை, மதியம் மற்றும் இரவு என எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம்..!