ஆவா குழுவின் அங்கத்தவர் ஒருவர் இராணுவ சிப்பாய்!

தற்போது இலங்கையில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள ஆவா குழு தொடர்பில் முக்கிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது,  யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா எனக் கூறப்படும் குழுவின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 பேரில் இராணுவத்தை சேர்ந்த ஒருவர் இருப்பதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இராணுவச் சிப்பாய் பொறியியல் படைப்பிரிவில் கடமையாற்றி வருபவர் என அந்த தகவல்கள் கூறுகின்றன.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த 6 சந்தேக நபர்களில் இராணுவச் சிப்பாய்க்கு மேலதிகமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்கள் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம், உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, திருநெல்வேலி, கொக்குவில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இராணுவச் சிப்பாய் தற்போதும் கடமையில் இருந்து வருபவர் என பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.