ஆரவ்விற்கு அடித்த ஜாக்பாட்…

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். அதிலும் குறிப்பாக ஓவியா அவரை காதலித்ததால் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் தற்போது கோலிவுட்டில் அறிமுகமாகிறார். மாடலாக இருந்த ஆரவ் தற்போது ஹீரோவாகிவிட்டார்.

சிலம்பாட்டம் சரவணன் இயக்கும் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்கிறார். இந்நிலையில் அவர் மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இயக்குனரும், தயாரிப்பாளருமான சமீர் பரத் ராமின் படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்க உள்ளார். காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனின் குறும்படமான மீண்டும் ஒரு புன்னகையை தான் சமீர் முழு நீள படமாக இயக்குகிறார்.

இரண்டு ஹீரோயின்களை வைத்து சமீர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது