ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்ட அதிசய ஆறு!

கெமிர் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்திருந்த பகுதிகளில் ஒன்று அங்கோர்ட். அவர்கள் ஆட்சியில் இருந்த காலகட்டமான, 9 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையிலும் அந்த பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்று தான் ஆயிரம் லிங்கங்கள் பதிக்கப்பட்ட ஆற்றுப்பகுதி.

அங்கோர்வாட்டுக்கு வடகிழக்குப் பகுதியில் குலன் மலை அமைந்துள்ளது. மரங்கள் அடர்ந்த இந்த காட்டுப்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலைக்கு முறையான சாலைகள் ஏதும் கிடையாது. வெறும் மண் சாலைகள் மட்டுமே உள்ளன.

இந்த மலைப்பகுதியில் சயாம்ரீய ஆறும் அதன் துணை ஆறான ஸ்டங் என்ற சிறு ஆறும் ஓடுகிறது. இதில் ஸ்டங் ஆறு ஓடிவரும் வழியில், தண்ணீருக்கு அடியில் உள்ள  மணற்பாறைகளில் வரிசையாக சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட 150 மீட்டர் தூரத்துக்கு ஒரே மாதிரியான அளவில் லிங்கங்கள் செதுக்கப்பட்டு அவற்றுக்கு இடையிடையே சில பெரிய லிங்கங்களும் செதுக்கப்பட்டள்ளன.

சதுர வடிவில் ஆவுடையாரும் அதற்கு நடுவில் லிங்கமும் பதிக்கப்பட்டது போல ஒரு சிற்பம் உண்டு. வெறும் சிவலிங்கங்கள் மட்டுமல்லாமல், லட்சுமி, அனந்த சயனன், பிரம்மா, சயன நிலையில் விஷ்ணு, உமா சகித சிவன், ராமர், அனுமான் போன்ற சிற்பங்களும் இந்த ஆற்றுக்குள் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த சிற்பங்கள் அனைத்தையும் 11 மற்றும் 12 நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த துறவிகளால செதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Image result for ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்ட அதிசய ஆறு!

இந்த லிங்கங்களின் வழியே ஓடுகிற ஆறு, பின்னர் ஓர் அருவியாக விழுகிறது. அதை புனித நழுராகக் கருதி மக்கள் நீராடுகிறார்கள்.

தண்ணீருக்குள் சிற்பங்கள் செதுக்கப்படுவதற்கு அப்பகுதி மக்கள் கூறும் காரணம் மேலும் நம்மை ஆச்சரியப்படுத்தவே செய்கிறது. கங்கையைப் போல தண்ணீரைப் புனிதப்படுத்தவே இதுபோன்று தண்ணீருக்குள் சிற்பங்கள் செதுக்கப்பட்டன என்றும் இப்புனிதப்படுத்தப்பட்ட ஆறு நாட்டின் வழியே சென்று வயல்களில் நெல் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டையும் வளப்படுத்துகிறது. அந்த உணவை உண்பதால் நாட்டு மக்களும் புனிதமடைகிறார்கள் என்கின்றனர்.

fdgfdh