ஆமென் என்ற சொல்லின் விளக்கம் தெரியுமா? தெரிந்துக்கொள்வோம்!

ஆமென் ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும்.

விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் மகிழ்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தில் மட்டுமே ஆரம்பத்தில் பாவிக்கப்பட்டு வந்த இச்சொல் பின்னர் கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும் சொல்லாக பாவிக்கப்பட்டு வருகிறது.

விவிலியத்தில் ஆமேன் விவிலியத்தில் மூன்று பயன்பாடுகள் நேக்கத்தக்கவை.

வசனத்தின் முன் ஆமென்,  மற்றைய பேச்சாளரின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் போது. உதாரணமாக;1அரசர்1:36 (யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக அப்படியே ஆகுக! என தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக)

ஆச்சரிய ஆமேன், ஆச்சரியத்துகுள்ளான போது. உதாரணமாக;நேகேமியா 5:13 (மேலும், நான் என் ஆடையை உதறிவிட்டு, இவ்வார்த்தையின்படி நடக்காத ஒவ்வொருவரையும் கடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும், திருப்பணியினின்றும் உதறிவிடுவாராக. அவர்கள் இவ்வாறு உதறிவிடப்பட்டு, வெறுமையாக்கப்படுவர் என்றேன். இதற்குச் சபையார் அனைவரும் ஆமென் என்று சொல்லி ஆண்டவரைப் புகழ)

முற்று ஆமேன், ஒரு பேச்சாளர் தனது பிரசங்கத்தை/பேச்சை முடிப்பதற்காக பயன்படுத்துவது. கிறிஸ்தவ விவிலியத்தில் மொத்தம் 99 முறை “ஆமேன்” பாவிக்கப்பட்டுள்ளது.