ஆண் நண்பருடன் இருந்ததை பார்த்த தந்தைக்கு மகள் கொடுத்த தண்டணை

நொய்டாவில் கடந்த ஞாயிற்று கிழமை காலை 4 மணியளவில் 48 வயதான விஸ்வநாத் ஷாகுவின் மகள் பிரியங்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவருடைய ஆண் நண்பருடன் படுக்கை அறையில் ஒன்றாக இருப்பதை பார்த்து விஸ்வநாத் தனது மகளையும் அவரது ஆண் நண்பரையும் திட்டியுள்ளார்.

இதனால் விஸ்வநாத்துக்கும் அவருடைய மகளின் நண்பரான தர்மேந்திராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையேயான கைகலப்பு முற்றவே பிரியங்கா அவருடைய காதலருடன் இணைந்து தந்தையை தாக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் பிரியங்காவும் தர்மேந்திராவும் இணைந்து விஸ்வநாத்தை மாடியிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

இந்த சம்பவம் குறித்து, விஸ்வநாத்தின் மகன் சஞ்சய் கூறும்போது, தனது தந்தை மூன்றாவது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்டதாகவும், விஸ்வநாத் கீழே தள்ளிவிடப்பட்ட பிறகு தனது சகோதரி பிரியங்கா அவருடைய காதலனுடன் தலைமறைவாகியுள்ளதாகவும் கூறினார்.

இதனால் தனது தந்தையின் மரணத்தில் தங்கைக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார் சஞ்சய்.

3வது மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட விஸ்வநாத்தின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவி காயத்ரி படுக்கை அறையை விட்டு வெளியே வந்து பார்த்தார்.

பின்னர் படுகாயமடைந்த கணவரை மருத்துவமனையில் அனுமதித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஸ்வநாத் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதனால் வழக்குப் பதிவு செய்த பொலிசார் கொலை செய்யப்பட்ட விஸ்வநாத்தின் மகளை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள தர்மேந்திராவையும் பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.