ஆண்டாள் விடயத்தில் சர்ச்சைக்கு உள்ளான கவிஞர் வைரமுத்து!

ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 8-ம் திகதி நடைபெற்ற ஆண்டாள் குறித்து கருத்தரங்கத்தில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். அப்போது, ஆண்டாள் வாழ்ந்த காலம், தெய்வம் மற்றும் கடவுளுக்கிடையே உள்ள வித்தியாசம் குறித்து வைரமுத்து விளக்கிய விதத்தால் கருத்தரங்கில் இருந்தவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்தனர்.
வைரமுத்துவின் இந்த சர்ச்சையான கருத்திற்கு இந்து முன்னணியினர் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். ஆனால் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அதற்கும் ஒரு படி மேலே சென்று கண்டனத்தை பதிவு செய்ததோடு மட்டுமில்லாமல் மிகவும் தரக்குறைவாக வைரமுத்துவை விமர்சித்தார். ராஜாவின் இந்த கருத்திற்கு அரசியல் தலைவர்கள் உட்பட பல திரை பிரபலங்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இந்து முன்னணி பிரமுகர் சூரி அளித்த புகாரின் பேரில், வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.