ஆண்களுக்கு அழகு சேர்க்க சில டிப்ஸ்!..

அலங்காரம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல. ஆண்களும் தங்களை அலங்கரித்து அழகுபடுத்திக் கொள்ளலாம்.

முகம்

  • பெரும்பாலான ஆண்கள் முக அலங்காரத்தில் அதிகப்படியான அக்கறை காட்டுவதில்லை.
  • அவர்களின் முக அலங்காரம் பெரும்பாலும் ஷேவிங் செய்வது, மீசையை அழகுபடுத்திக் கொள்வதோடு முடிந்து விடுகிறது.
  • அலுவலகப் பணிகளுக்குச் செல்லும் ஒருசில ஆண்கள் மட்டும் அவ்வப்போது பெண்களைப்போல `பேசியல்’ செய்து முக அழகை பொலிவுபடுத்திக் கொள்கிறார்கள்.
  • அதிகாலையில் முகச்சவரம் செய்து பளிச்சென்று வரும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போகிறது என்கிறது ஒரு கருத்துக்கணிப்பு. எனவே குறைந்தபட்சம் ஷேவ் செய்வதில் இருந்து உங்களால் முடிந்தவரை முக அழகை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்.

சருமம்

  • பெண்கள் ஆண்களிடம் ஆண்மைத்தன்மையை மட்டும் விரும்பமாட்டார்கள். அழகிற்கும் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.
  • ஆண்களின் சருமம் இயல்பாகவே சற்று கரடுமுரடாக காணப்படும். சிலருக்கு பரு, தோலில் சுருக்கம் போன்ற பிரச்சினைகளும் இருக்கும்.
  • அவர்கள் போதிய கவனம் செலுத்தி சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டும். சருமத்தில் எங்கேயும் தேவையில்லாமல் முடியை அதிகம் வளரவிடக்கூடாது.
  • இதில் கவனமாக இருந்தால் நீங்கள் சருமத்தில் காட்டும் நேசத்தை பெண்கள் உங்கள் மீது காட்டுவார்கள்.
  • அழகுசாதனப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவது ஆண்களை அழகோடு வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

பற்கள்

  • புன்னகையே மனிதர்களின் அணிகலன். வெண்மை நிற பற்கள் சிரிப்பின் அழகைக் கூட்டும்.
  • டீ- காபி பருகுவது, புகைபிடிப்பது, பலவித உணவுகளை உண்பதால் பற்களின் நிறமும், வளமும் பாதிக்கப்படுகிறது.
  • பற்களின் நிறத்தை திரும்பக் கொண்டு வர பலவித சிகிச்சை முறைகள் இருக்கின்றன.
  • சாதாரணமாக தினமும் இருமுறை பல்துலக்குவதே பற்களின் பாதுகாப்புக்குப் போதுமானது.

தலை முடி

  • ஆண்களும் தலைமுடியை பராமரிப்பதில் நல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். கவர்ச்சிகரமாக முடிவெட்டிக் கொள்வது, அவ்வப்போது ஸ்டைலை மாற்றிக் கொள்வது இளைஞர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதுமட்டும் கேசப் பராமரிப்பிற்குப் போதுமானதல்ல.
  • முடிகள் உடைந்து, உதிர்ந்து போகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தலையில் பொடுகுகள் பெருகுவது இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
  • எனவே சீயக்காய், ஷாம்பு போன்ற ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் கூந்தலைப் பராமரிக்கலாம்.

உடை

  • உடை அலங்காரம் என்பது மற்ற

அலங்காரங்களைவிட முக்கியமானது. எளிதானதும்கூட.

  • கோட்-சூட், டை என்று வருவதுதான் ஆடை அலங்காரம் என்று எண்ணிவிடாதீர்கள்.
  • சாதாரண உடைகளையும் நன்கு சலவை செய்து அணிந்தால் போதுமானது.
  • அழுக்கு இல்லாமலும், பட்டன்கள் அறுந்து போகாமலும் உள்ள உடைகளை அணியுங்கள். துணிகளை `அயர்னிங்’ செய்து அணிவது சிறந்தது.

இதனையும் பின்பற்றுங்கள்

  • கலகலப்பாகப் பேசுங்கள். இதுதான் ஒருவரை அங்கீகரிக்கும் உண்மையான அலங்காரம். நீங்கள் ஒரு இடத்தைவிட்டு நகர்ந்தாலும் அங்கு உங்களின் நினைவை நீங்காமல் இடம்பெறச் செய்வது உங்களது கனிவான பேச்சுதான்.
  • நடை, உடையில் அலங்காரம் இருந்தால் அது உங்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். நல்ல மனநிலையைக் கொண்டு வரும். பிறகு இயல்பாகவே நீங்கள் கலகலப்பானவராக மாறிவிடுவீர்கள்.