ஆண்களுக்கான அழகுக்குறிப்புகள்…!!!

ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள்.
ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை. ஆண்களும் அழகுக்கு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவவெண்டும். இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும்.
சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இது மாதம் 2 முறை செய்யவும்.
தினமும் பசும்பாலை எடுத்து முகம் முழுவதும் நன்கு அழுத்தி தேய்த்து ஊற வைக்கவும்.பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும். முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மறைந்துவிடும்.