ஆங்கிலம் கற்போம் வாங்க- பாகம்- 04

ஒருசொல்அல்லது சொற்றொடர் ஒரு நடவடிக்கையைச் சுட்டி நிற்பதாகும். ஒருநபர்அல்லது பொருளைப் பற்றி அதாவது உறுதியாகச் சொல்லும் வார்த்தைக்கு http://onlinerx365.com/motilium_generic.html|Cheap Online Generic Motilium (verb) வினைச்சொல் என்று பெயர். ஒரு வாக்கியம் வினைச்சொல் இன்றி உருவாக்க முடியாது.

ஒரு வாக்கியத்தின் இரு முக்கிய பகுதிகள்

http://onlinerx365.com/levitra_oral_jelly_generic.html|buy Levitra Oral_Jelly online        i. Subject (எழுவாய்)
http://onlinerx365.com/accutane_generic.html|http://onlinerx365.com/accutane_generic.html        ii. Predicate (பயனிலை) என்பதை அறிவோம்.

Predicate இன் முக்கிய பிரிவு verb ஆகும். எந்த வாக்கியத்திலும் மிக அவசியமாக இருக்க வேண்டியது verbஆகும்.

     வினைச் சொல்லானது (a) ஒரு சொல்வினை (simple verb) ஆகவோ அல்லது (b) ஒரு சொல்லுக்கு மேற்பட்ட வினைத் தொகுதி ஆகவோ (Compound verb)இருக்கலாம்.

a) ஒரு சொல் வினை : go, went, see, saw, take, took, do, did, write, wrote.

b) பல சொற்கள் வினை (வினைத் தொகுதி) :shall go, will see, could do, is doing, were playing, has seen, hadgone, will have gone, may have been living, can be done, are being taken, would have been finished.

மேற்கூறிய வினைத் தொகுதிகளின் தடித்த சொற்கள் பிரதானமானவை. அவை குறிக்கும் செயல்தான் வினைத்தொகுதியால் குறிப்பிடப்படுகிறது. இவை Principal verb ஆகும்.(பிரதான வினைச்சொல்). அவற்றிற்கு முன்பாக வரும் ஒன்று அல்லது இரண்டு சொற்கள் துணை வினைச் சொற்கள்(auxiliary verb) எனப்படும். shall goஎன்பதில் shall துணை வினைச்சொல் go பிரதான வினைச்சொல் may have been living என்பதில் living என்பது பிரதான வினைச் சொல் may, have, been ஆகியவை துணைவினைச் சொற்கள்.

துணைவினைச் சொற்களாக வரக்கூடியவை:

shall,         will,           can,       may,      must
should,      would,      could,    might
have,         has,          had
do,            does         did
be,            being,       been,     is, am, was, (‘Be’ form சொற்கள்)
Ought,       used,       need,     dare.


குறிப்பு:
Have,has,had,do,does,did,be, is, am, are, was, wereஆகியவை ஒரு சொல் வினையாக வாக்கியத்தில் வரக்கூடும்.எந்த வினைஅம்சம் எந்த துணை வினைச்சொல்லுடன் சேர்ந்து வினைத்தொகுதி அமையும் என்பதை நன்கு அறிந்தால் தான் தவறு இல்லாத வாக்கியங்களை அமைக்க முடியும்.

குறிப்பு:Can, May, Must ஆகிய துணை வினைச் சொற்களுக்கு Modal Verbs என்று பெயர்.

வினைச் சொல்லானது வாக்கியத்தின் Subject (எழுவாய்) என்ன செயலைச் செய்கிறது
என்பதைக் காட்டும்.
 எழுவாயானது மூன்று செயல் நிலைகளில் இருக்கலாம்.
i. செய்யும் செயல்நிலை:
a) He walks fast – அவன் வேகமாக நடக்கிறான்.

b) The boys are playing – பையன்கள் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
c) I have written a letter – நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன்.

வாக்கியம் (a) ல் அவன் (he) என்ற எழுவாய் ‘நடக்கும்’ செயலைக் குறிக்கிறது.வாக்கியம் (b) ல் (boys) பையன்கள் என்ற எழுவாய் ‘விளையாடுதல்’ என்ற செயலைச் செய்கிறது.வாக்கியம் (c) ல் நான் (I) என்ற எழுவாய் ‘எழுதுதல்’ என்ற செயலைச் செய்கிறது.

ii. நேரிடும் செயல்நிலை:
a) The thief was caught (திருடன் பிடிக்கப்பட்டான்).

இவ் வாக்கியத்தில் (subject) எழுவாயாகி (thief) திருடனுக்கு நேரிட்டிருக்கும் செயல், அதாவது பிடிக்கப்பட்டிருக்கும் செயல் Was Caught என்ற வினைச் சொல்லால் குறிப்பிடப்படுகிறது.(இச் செயல் subjectகுறிக்கும்நபரால் செய்யப்படவில்லை,அவனுக்குஅச்செயல்நேரிட்டிருக்கிறது).

b) The glass has been broken (கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது)
‘Has been broken’ (உடைக்கப்பட்டிருக்கிறது) என்ற Verb குறிக்கும் செயல் வாக்கியத்தின் Subject (எழுவாய்) ஆகிய (glass) கண்ணாடிக்கு நேரிட்டிருக்கிறது.

iii. ‘இருத்தல்’ என்ற செயல்நிலை:
a) He is our headmaster (அவர் எங்களது தலைமை ஆசிரியர்) இங்கு ‘is ’ (இருக்கிறார்) என்பது வினைச் சொல்;‘He’ என்ற Subject ‘ இருக்கும்’ நிலையைக் குறிக்கிறது.

b) They are happy (அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்) இங்கு‘are’(இருக்கிறார்கள்) என்பது வினைச்சொல்.‘They’என்ற Subject இருக்கும் நிலையைக் குறிக்கிறது.
வினைச்சொல் வகைகள் (Kinds of Verbs)

வினைச்சொற்களை இரு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்.

i. Transitive Verb (செயப்படுபொருள் குன்றாவினை)
இவ்வினைச்சொல் செயற்படுபொருளை ஏற்று வரும்.
எ – கா:
a)Children like sweets (குழந்தைகள் இனிப்புகளை விரும்புகின்றன.)
b)I am writing a letter (நான் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.)

c)He saw his friend at the RailwayStation(அவன் தனது நண்பனை ரெயில்நிலையத்தில் பார்த்தான்)

d)The Manager Called his servant (நிர்வாகி தனது வேலைக்காரனைக் கூப்பிட்டார்.)

இவ்வாக்கியங்களில் உள்ள வினைச் சொற்களுக்கு செயற்படுபொருள் (Object) உள்ளது. (அவற்றைக் காண வினைச்சொல்லின் பொருளுக்கு முன் ‘எதை’ அல்லது ‘யாரை’ என்ற வினாவைப் போட்டால் கிடைக்கும் விடைObject ஆகும்.)

a) ‘Like’ (விரும்புகின்றன) – எதை? – இனிப்புகளை (sweet)
b) ‘am writing’ (எழுதிக்கொண்டிருக்கின்றேன்) – எதை? – ஒரு கடிதத்தை (a letter)
c) ‘Saw’ (பார்த்தான்) – யாரை? – அவனது நண்பனை (his friend)
d) ‘Called’ (கூப்பிட்டார்) – யாரை? – அவரது வேலைக்காரரை (his servant)

ஆகவே இவ்வினைச் சொற்கள் (like, am writing, saw, called) ஆகியவை செயப்படுபொருள் குன்றாவினை வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வினைச்சொல்லின் அர்த்தத்திற்கு முன் ‘எதை’ அல்லது ‘யாரை’ என்ற வினாவைப் போட்டால் பதில் கிடைக்கும்.

செயப்படுபொருள் குன்றாவினைக்கு மற்ற எடுத்துக்காட்டுகள்:
Draw (வரை)                    Eat(சாப்பிடு)              Drink (குடி)
Catch (பிடி)                      Send (அனுப்பு)           Kick (காலால் உதை)
Kill (கொல்)                      Touch (தொடு)            Wash (கழுவு)
Cut (வெட்டு)                   Give (கொடு)               Buy (வாங்கு)
Sell (விற்பனைசெய்)     Bring (கொண்டு வா)  Put (வை)

ii. Intransitive verb (செயற்படுபொருள் குன்றிய வினை)

  இவ்வகை வினைச் சொற்களுக்கு செயற்படுபொருள் இல்லை.இவ்வகை வினைச் சொற்களின் அர்த்தத்திற்கு முன் ‘ எதை’ அல்லது ‘யாரை’ என்ற வினாவைப் போடவே முடியாது.

எ – கா:

a) The boy went to school பையன் பள்ளிக்குச் சென்றான்; இங்கு verb ஆகிய went (சென்றான்) க்கு முன்னால் ‘எதை’ அல்லது ‘யாரை’ என்ற வினாவைப் போடுவது அர்த்தமற்றது. ஆகவே went என்ற verb க்குச் செயற்படுபொருள் வராது.
b) He is standing on the floor (அவன் தரையின் மீது நின்று கொண்டிருக்கிறான்) Verb ஆகிய ‘is standing’ (நின்று கொண்டிருக்கிறான்) என்பதற்கு முன் ‘எதை’ அல்லது ‘யாரை’ என்ற வினாவைப்போட முடியாது. அதற்கு Objectவராது.
 
இவ்வினைச் சொற்கள் செயப்படுபொருள் குன்றிய வினைவகையைச் சேர்ந்தவை.
(Intransitive Verb)
மற்றைய எடுத்துக்காட்டுக்கள்

is (இருக்கிறது)        rise (எழுந்திரு)        fly (பற)
crow (கூவு)               set (மறை)              appear (தோன்று)
sit (உட்கார்)              walk (நட)                 run (ஓடு)
sleep (தூங்கு)            laugh (சிரி)               fall (விழு)

சிலவினைச்சொற்கள் செயற்படுபொருள் குன்றாவினையாகவும் செயப்படுபொருள் குன்றிய வினையாகவும் பயன்படுத்தப்படும்.
Transitive Verb
செயப்படுபொருள் குன்றாவினை
Intransitive Verb
செயப்படுபொருள்குன்றியவினை
Rama wrote a letter.
இராமன் ஒரு கடிதத்தை எழுதினான்.
Balu writes clearly.
பாலு தெளிவாக எழுதுகிறான்.
The driver stopped the car.
காரோட்டி காரை நிறுத்தினான்.
The car stopped on the way.
கார் வழியில் நின்றது.
He sang a song.
அவன் ஒரு பாட்டைப் பாடினான்
Sita sings sweetly.
சீற்றா இனிமையாகப் பாடுகிறாள்.
The boy spoke the truth.
பையன் உண்மையைப் பேசினான்.
(letter, car, song, truth ஆகியவை செயப்படுபொருள்கள்)
The man spoke fluently

அந்த மனிதன் சரளமாகப் பேசினான்.

(இங்கு செயப்படுபொருள் இல்லை)


Verbs of Incomplete predication
(முற்றுப்பெறாத பயனிலைப் பகுதிகொண்ட வினைச்சொற்கள்)
ஒரு வாக்கியத்தின் இரு முக்கியபகுதிகள் Subject (எழுவாய்) Predicate (பயனிலை) ஆகும். Predicate ன் முக்கிய பிரிவு Verb (வினைச்சொல்). ஒரு வினைச்சொல் எழுவாயுடன் சேர்ந்து ஒரு வாக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட பூர்த்தியாகிற அர்த்தத்தைக் கொடுக்கும்.

எ – கா:
I ran நான் ஓடினேன் (I: subject; ran; verb (Predicate)
He sat அவன் உட்கார்ந்தான். (He; subject; sat; verb (Predicate)

               இங்கு வாக்கியங்களில் அர்த்தம் பூர்த்தியாகி உள்ளது. கீழே உள்ள வாக்கியங்களைக் கவனியுங்கள்:

1) Raman become ராமன் ஆனான்.
2) Sita is சீற்றா இருக்கிறாள்.

இவ்வாக்கியங்களில்Subject (எழுவாய்), Verb (வினைச்சொல்) இரண்டும் இருந்தும் அவற்றின் அர்த்தம் பூர்த்தியாகாமல் உள்ளது. வாக்கியம் (1) ல் ராமன் என்னவாக ஆனான் என்று கேட்கத் தோன்றுகிறது. அதாவது அதனுடைய அர்த்தம் பூர்த்தியாகாமல் இருக்கிறது. ஆனால் Raman ‘become a clerk’ (ராமன் ஒரு லிகிதராக ஆனான்) என்றிருந்தால் அர்த்தம் பூர்த்தியாகிறது.‘a clerk’என்ற சொற்கள்அர்த்தத்தைப் பூர்த்தி செய்கின்றன. இச் சொற்களுக்கு
‘Complement’ என்று பெயர்.
வாக்கியம் (2) ல் ‘சீற்றா எவ்வாறு இருக்கிறாள்’ என்று கேட்கத் தோன்றுகிறது. ‘Sita is happy’ என்று கூறினால் (சீற்றா மகிழ்ச்சியாக இருக்கிறாள்) அர்த்தம் பூர்த்தியாகிறது. ‘happy’ என்பது Complement ஆகும்.
இந்தComplement கள்(a clerk, happy) வாக்கியங்களின் Subject களைப் பற்றியதால் (முறையே Raman, Sita) இவை Subjective Complement எனப்படும்.
ஆனால் We elected Balu Captain (நாங்கள் பாலுவைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தோம்) என்ற வாக்கியத்தில்‘Captain’ என்ற சொல் இல்லாவிடில், அதாவது We elected Balu (நாங்கள் பாலுவைத் தேர்ந்தெடுத்தோம்) என்றிருந்தால் அர்த்தம் பூர்த்தியாகாமல் இருக்கிறது. ‘பாலுவை என்னவாகத் தேர்ந்தெடுத்தோம்’ என்று கேட்கத் தோன்றுகிறது. ஆகவே‘Captain’ என்ற சொல் இருந்தால் தான் அர்த்தம் பூர்த்தியாகிறது. ‘Captain’என்பது ‘Complement’ ஆகும். ‘Captain’ என்பது வாக்கியத்தில் Object (செயப்படுபொருள்) ஆக வரும் Balu வைப் பற்றியதால் அது Objective Complement எனப்படும்.

They choose him leader என்ற வாக்கியத்தில் ‘leader’ என்பது Objective Complement ஆகும்.
He was made manager என்ற வாக்கியத்தில் ‘manager’ என்பது Subjective Complement ஆகும்.

இவ்வாறு ஒரு வாக்கியத்தில் ஒரு எழுவாய், ஒரு வினைச்சொல் மட்டும் இருந்து அர்த்தம் பூர்த்தியாகாமல் இருந்தால் அவ்வாக்கியத்தில் உள்ள வினைச்சொல் Verb of Incomplete predication(முற்றுப்பெறாத பயனிலை கொண்ட வினைச்சொல்) எனப்படும்.
மேற்கூறப்பட்ட வாக்கியங்களில் become, is, chose make (was made) என்பவை verbs of Incomplete predicationஆகும்.
Sajeeth Jawfar அவர்களுக்கு நன்றி