ஆங்கிலம் கற்கலாம் வாங்க- பாகம்- 02

இன்று எமது லங்காபுரியின் ஆங்கிலம் கற்போம் பகுதியில்  எளிமையான சில வார்த்தைகள் எப்படி பயன்ப்படுத்தலாம் என்பதனை பார்க்கலாம்.

இதில் temple அதாவது கோயில் என்ற ஒரு வார்த்தையை பல பல வடிவங்களில் எவ்வாறு பயன்ப்படுத்தலாம் எனக்காட்டப்பட்டுள்ளது.

இதனை நீங்கள் பல பெயர்ச்சொற்களை பயன்ப்படுத்தி அதிகமான வசனங்களை எழுதி பார்த்து பழகிக்கொள்ளலாம்

உதாரணம்- We go to temple. எனக்காட்டப்பட்டுள்ளது. இதனை

We go to school

We go to town

We go to home

We go to main road  என பயிற்சி செய்வது நல்ல பயனை தரும்.

1. We go to temple.

நாங்கள்  கோயிலுக்கு  போகின்றோம்

2. We are going to temple.
நாங்கள் கோயிலுக்குபோய்க்கொண்டிருக்கின்றோம்

3. We went to temple.
நாங்கள் கோயிலுக்கு  போனோம்

4. We didn’t go to temple.
நாங்கள் கோயிலுக்கு போகவில்லை

5. We will go to temple.
நாங்கள் கோயிலுக்கு  போவோம்

6. We won’t go to temple.
நாங்கள் கோயிலுக்கு  போகமாட்டோம்

7. Usually we don’t go to temple.
சாதாரனமாக நாங்கள் கோயிலுக்கு போவதில்லை
8. We are not going to temple.
நாங்கள் கோயிலுக்கு போய்க்கொண்டிருக்கவில்லை

9. We were going to temple.
நாங்கள் கோயிலுக்கு போய்க்கொண்டிருந்தோம்

10. We weren’t going to temple.
நாங்கள் கோயிலுக்கு போய்க்கொண்டிருக்கவில்லை

11. We will be going to temple.
நாங்கள் கோயிலுக்கு போய்க்கொண்டிருப்போம்

12. We won’t be going to temple.
நாங்கள் கோயிலுக்கு போய்க்கொண்டிருக்க மாட்டோம்

13. We are going to go to temple.
நாங்கள் கோயிலுக்கு போகப்போகின்றோம்

14. We were going to go to temple.
நாங்கள் கோயிலுக்கு போகப்போனோம்

15. We can go to temple.
16. We are able to go to temple.
எங்களுக்கு கோயிலுக்கு போக முடியும்

17. We can’t go to temple.
18. We are unable to go to temple.
எங்களுக்கு கோயிலுக்கு போகமுடியாது

19. We could go to temple.
20. We were able to go to temple.
எங்களுக்கு கோயிலுக்கு போக முடிந்தது

21. We couldn’t go to temple.
22. We were unable to go to temple.
எங்களுக்கு கோயிலுக்குபோக முடியவில்லை

23. We will be able to go to temple.
எங்களுக்கு கோயிலுக்கு போக முடியுமாக இருக்கும்

24. We will be unable to go to temple.
எங்களுக்கு கோயிலுக்கு போக முடியாமலிருக்கும்

25. We may be able to go to temple.
எங்களுக்கு கோயிலுக்கு போக முடியுமாக இருக்கலாம்