ஆகஸ்ட் 2 முதல் யாருக்கு யோகம்!

குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

இந்த நிகழ்வு நிகழும் மங்களகரமான துர்முகி ஆண்டு ஆடிமாதம் 18 ம் நாள் (2.8.2016) செவ்வாய்க்கிழமை இடம்பெறுகிறது.

அந்த வகையில் பூசம் நட்சத்திரம், அமாவாசை திதி சித்த யோகம் கூடிய சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு குரு பகவான் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றார்.

யோகம் தரும் ராசிகள்

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம்.

குரு வழிபாட்டினால் யோகம் அடையும் ராசிகள்

மேஷம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்பம்.

ஜோதிடத்தில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு குரு பெயர்ச்சி எந்தெந்த ராசிக்கு எத்தனை சதவிகிதம் நன்மை தரும்

மேஷம்- 6 ம் இடம் (ரோகஸ்தானம்) 50% நன்மை.

ரிஷபம்- 5 ம் இடம் (பூர்வ புண்யஸ்தானம்) 70% நன்மை

மிதுனம்-4 ம் இடம் (கேந்திரஸ்தானம்) 50% நன்மை (அர்த்தாஷ்டம குரு)

கடகம்-3 ம் இடம்(தைரியஸ்தானம்) 40% நன்மை

சிம்மம்-2 ம் இடம் (தன ஸ்தானம்) 90% நன்மை