அவுஸ்திரேலியாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் நியுசிலாந்து பிரதமர்!!!

மனுஸ் தீவில் உள்ள அகதிகள் தொடர்பாக, அவுஸ்திரேலிய அரசாங்கம் கடைபிடிக்கும் கொள்கைக்கு, நியுசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குறித்த முகாம் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள 600 அகதிகள் வரையில் முகாமைவிட்டு வெளியேற மறுத்துள்ளனர்.

அவர்களுக்கான நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அங்கிருந்து 150 அகதிகளை பொறுப்பேற்க நியுசிலாந்து முன்வந்துள்ள போதும், அவுஸ்திரேலியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து நியுசிலாந்து பிரதமர், இதுதொடர்பில் தாம் மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.