அருமையான குட்டிக்கதை மிஸ் பண்ணாம வாசித்துப்பாருங்க!!

Frnd *** மச்சி வாடா என்கூட ஒரு இடத்திற்கு போகணும்,,

boy *** சரி மச்சான் வா போகலாம்,எங்கடா

frnd *** நீ வாடா போயிற்று வருவோம்
போகும்போது சொல்றேன்டா

boy *** மச்சி வாடா ஒரு டீ குடிக்கலாம்டா

இருவாரும் டீ குடிக்க கடைக்கு போகிறாங்க அங்கே போய் இரண்டு டீ கேட்க்கிறாங்க அப்போது அந்த கடையில் மனவளர்ச்சி குன்றிய ஒருசிறுமி அவனை பின்னால் சட்டையில் பிடித்து சிரித்தது,,,,,
உடனே அந்த கடைக்காரன் customer கிட்டை தொந்தரவு செய்யாதே என்று அந்த பிள்ளையை தள்ளிவிட்டான் ,,,
சிறுமி ஐயோ என்று வலியில் துடித்தது !

boy *** ஏய் என்னயா?? இப்படி பண்ணுறாய் அத ஒரு குழந்தை அதை போய் தள்ளிவிட்டாயே என்மேல் தானே பிடித்தாள் உனக்கு ஏன்யா??

baby *** அழுதுகிட்டே இருந்தது

boy *** பாப்பா உன் பெயர் என்னது?? எங்கிருந்து வருகின்றாய்???

baby *** பதில் சொல்லாமல் தலையை மட்டுமே அசைத்தது,,

உடனே கடைக்காரன் அது பைத்தியம் போல் இருக்கிறது அதனால்தான் ஒன்றும் பேசவில்லை !!

boy *** யோ பேசாமல் போயிரு குழந்தைகள் தப்பு செய்தாலும் அதை அடிக்க கூடாது ஆனால் இது மனவளர்சி இல்லாத பிள்ளை வேறு,,,,

frnd **** நண்பா பாவம்டா இந்த குழந்தை இதை ஏதாவது காப்பகத்தில் சேர்த்திடலாம்டா,,

boy *** (அழுகிறான்) மச்சி பாவமா இரக்குடா ஏன்டா இந்த கடவுளுக்கு இரக்கமே இல்லையாடா எதற்காக இப்படி ஊனமாக படைக்கின்றாரு நல்லா இருக்கின்ற நம்மளுக்கே நம்மை தெரியாமல் தவறு நடக்கின்றது அப்புறம் எப்படீடா இந்த பிள்ளைக்கு தெரியும் இந்த பிள்ளையை போய் அடிக்கிறானே எனக்கு அழுகையா வருதுடா,,,

baby *** அவனின் அழுகையை பார்த்து அதுவும் அவனை கட்டி தழுவி அழுதது,,

frnd **** ஆமாம்டா மச்சி சில மனிதர்களுக்கு இரக்கமே இருக்காதுடா அவனுங்க மனித பிறவியே கிடையாதுடா,,

இருவரும் அந்தபிள்ளையை அழைத்து சென்றனர்,காப்பகத்தின் உள்ளே செல்லும் போது அங்கே ஆட்கள் கூட்டமாக இருந்தது!!

frnd **** இரு மச்சி போய் பார்க்கிறேன்,,,என்ன ஆயிடிச்சி மேடம்,,

amma *** தம்பீ என் பிள்ளைக்கு சுய புத்தி இல்லை அவளை இங்கே காணவில்லை என்று சொல்றாங்கப்பா (அழுதுகிட்டு)

frnd ***** அம்மா இங்கே வாங்க இந்த பிள்ளைதானே??

உடனே அந்த பிள்ளையின் அம்மா ஓடி வந்து பிள்ளையை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார் ஆமா தம்பீ இவள்தான்,,,

boy **** நல்லவேளை அம்மா இவள் எங்ககிட்ட வந்தாள் இல்லை என்றால் இவளுக்கு என்ன நிலமை என் தெரியாது

amma *** தம்பீ கடவுள் மனிதனை படைத்துவிட்டு சில பிள்ளைகளை மனித வடிவில் ஊனமாக படைக்கின்றார் இரக்கமே இல்லையா அவருக்கு.தவம் இருந்து பெற்றேன் அவளுக்கு மனவளர்ச்சியை கடவுள் கொடுக்கவில்லை அவள் படும் வேதனை பொறுக்க முடியாதுப்பா(அழுகிறாள்))

frnd **** கண்ணில் இருந்து கண்ணீர் வடித்தான்,,,

boy ***அழுதுகிட்டு மச்சி இதுபோல பிள்ளைகளை நாம எங்கே பார்த்தாலும் ஒரு டீ,காபி வாங்கி கொடுத்தாவது நம்மளால முடிந்த உதவி செய்யலாம்டா,,,,.

amma *** அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தம்பீ இந்தமாதிரி பிள்ளைகளுக்கு உங்களால முடிந்த உதவி பண்ணுங்க புண்ணியமா போகும் தம்பீ

நட்புகளே தவறுஎன்றால் மன்னியுங்கள்!!!