அரச முகாமைத்துவ உதவியாளர் பகிரங்கப் போட்டிப் பரீட்சைப் பெறுபேறு வெளியிடப்பட்டுள்ளது..!!!

அரச முகாமைத்துவ உதவியாளர் பகிரங்கப் போட்டிப் பரீட்சைப் பெறுபேறு இணையத்தில் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பரீட்சை தொடர்பான பெறுபேறு சில வாரங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தன. பரீட்சைக்கு தோற்றியவர்களில் இருந்து 6 ஆயிரம் பேர் சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதாக இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி ஏ.வி.கமகே குறிப்பிட்டுள்ளார்.

நேர்முகப் பரீட்சை இவ்வாரம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.