அரச பணியாளர்களின் சம்பளம் 15 சதவீதத்தால் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன!!!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச பணியாளர்களின் சம்பளம் 15 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தன பாராளுமன்றத்தில் வைத்து நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அலுவலக உதவியாளரின் அடிப்படை சம்பளம் 14ஆயிரம் ரூபாயில் இருந்து 23 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும்

சட்டமா அதிபரது சம்பளம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட மருத்துவர்களின் அடிப்படை சம்பளம் 60 ஆயிரம் ரூபாயில் இருந்து 69ஆயிரத்து 756 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

மேலும், அரச பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளின் பொருட்டு அரசாங்கத்திற்கு ஆண்டுதோறும் 12 பில்லியம் ரூபாய் மேலதிகமாக தேவைப்படுவதாகவும் அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டமானது, சாதாரண மக்களுக்கு பல நன்மைகளைக் கொண்டிருப்பதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹூருப் தெரிவித்துள்ளார்.