அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது!

நல்லாட்சி அரசாங்கத்தில் குழப்பங்களை விளைவிப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருப்போரே இவ்வாறு அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதியை நிர்க்கதியான நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் ஜனாதிபதியை ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் தனிமைப்படுத்தாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்குளியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.