அரசாங்கத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்!

இலங்கையில் 2018 ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி  மன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அதன் முடிவுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்நிலையில் இலங்கையின் தமிழர் எல்லை பிரிப்பு காரணமாக இம்முறை உள்ளூராட்கி மன்ற தேர்தலுக்கான ஆசன பதிவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இத்தேர்தலில் 1கோடி 58இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். மேலும் 1இலட்சத்துக்கு மேலான வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இதில்

உள்ளூராட்சி சபை – 341

மாநகர சபை – 24

நகரசபை – 41

பிரதேச சபை – 227

எனவும் மொத்தமாக 8293 ஆசனங்களுக்கு 100000ற்கு மேற்பட்டோர் தேர்தலில் களம் இறங்கியது குறிப்பிடதக்கது.

மேலும்  பல முரண்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியானது தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது. இத்தேர்தலில் எதிர்பார்த்த அனைத்து கட்சிகளும் பின்னடைவை சந்தித்துள்ளது. மேலும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தனது சொந்த மாவட்டங்களில்  கடந்த தேர்தலில் செல்வாக்கு செலுத்திய போதிலும் இத்தேர்தலில் பாரிய சரிவினை சந்தித்துள்ளனர்.

தொகுதிகள் அதிகரிக்கப்பட்ட அதேவேளை தமிழர்களை ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கு மட்டுப்படுத்தி இனம் சார்ந்து செயற்ப்பட்டதும் அரசாங்கத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்ததுள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் இவ்வுள்ளூராட்சி மன்ற தேர்தலானது அமைச்சரவையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.