அம்பாறை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிசு…!!!

அம்பாறை – நாவற்காடு பகுதியில் சிசுவொன்று உருக்குழைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது இந்த சிசு பிறந்த சில மணி நேரங்களில்  தூக்கி  வீசப்பட்டிருப்பதாக  அம்பாறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தலையில் காயங்களுடன்  சிசுவொன்று கிடப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, பொலிஸாரால்  குறித்த உடல் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை அம்பாறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.