அமைச்சரவைக் கூட்டம் இன்னும் சில நேரத்தில் இடம்பெறவுள்ளது…!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் கூடும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்னும் சில நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், காலை 09:30 மணியளவில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் நல்லாட்சி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நல்லாட்சியை தொடர்ந்து நடத்தி செல்வது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பாக கலந்துரையாட விஷேட குழு ஒன்று இன்று அமைச்சரவையின் போது நியமிக்கப்பட உள்ளதாக நேற்று இடம்பெற்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான கலந்துரையாடலில் அறிவிக்கப்பட்டுள்ளது.