அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை…!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனைத் தவிர வாக்குப் பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகிக்கும் மற்றும் அவற்றை பொறுப்பேற்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும் இரண்டு கல்வியற் கல்லூரிகளும் 08,09-ம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வியற் கல்லூரிகள் இம்மாதம் 12 -ம் திகதி மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் கல்வி நடவடிக்கைகளின் பின்னர் பாடசாலைகளை தேர்தல் பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்குமாறு கல்வி செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,இதேவேளை தனியார் கற்கை நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் வாக்களிப்பதற்கு ஏற்ற வகையில் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகளை திட்டமிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் வாக்குரிமையை உரிய வகையில் பயன்படுத்துவன் நிமித்தம் அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் தலைவர்களிடமும் ஆணைக்குழுவால் குறித்த இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.