அதிகமாக அப்பளம் சாப்பிட்டால் அவ்வளவு தான்!

மதிய உணவின் ருசியை அதிகரிக்கும் அப்பளம் உடல்நலம், ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. அதுமட்டுமல்லாது மசாலா இரண்டுமே உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல.

முக்கியமாக உப்பின் அளவு உடலில் அளவுக்கு அதிகமாக சேரக் கூடாது.

உடலில் இரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, இரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.

மசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வது தவறு. இதன் காரணத்தால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகலாம்.

அளவுக்கு அதிகமாக அப்பளம் சாப்பிடுவதால் உண்டாகும் அடுத்த பிரச்சனை மலச்சிக்கல்.

அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி, வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் உண்டாக காரணியாக இருக்கிறது.

ஆகவே வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் உணவில் அப்பளத்தை சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

அதுமட்டுமல்லாது 30 வயதை கடந்தவர்கள் தினமும் உணவில் அப்பளத்தை சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது.