அடபாவிகலா மலம் கழிப்போருக்கு மாலை மரியாதையா?

தெலங்கானா மாநிலத்திலுள்ள கரீம் நகர், வராங்கல், சித்தீப்பேட் மற்றும் சீர்சில்ல மாவட்டங்களுக்கு மனாயிர் கீழணை குடிநீர் வழங்கிவருகிறது.இந்த அணைக்கு அருகிலுள்ள இரு பூங்காக்கள் மற்றும் அணைக்கட்டுகள் பாதசாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.

 அணை ஒன்றை சுற்றி திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுத்து நிறுத்துவதற்கு, ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி கண்காணிக்கும் பணியை தெலங்கானாவின் கரீம் நகர் மாவட்ட காவல்துறை துவங்கியுள்ளது.பொதுவிடங்களில் மது அருந்துவதை கட்டுப்படுத்துவது மற்றும் பெண்களை கேலி செய்வதை தடுப்பது போன்றவற்றிற்காக கடந்த மாதம் முதல்முறையாக இந்த ஆளில்லா விமானத்தை காவல்துறை பயன்படுத்தியது.

ஆனால், இப்போது, திறந்தவெளியில் மலம் கழிப்போரை கண்டறிய இந்த ஆளில்லா விமானம் உதவுகிறது.

இத்திட்டத்தால் திறந்தவெளியில் மலம் கழிப்போருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அறிவுரை கூறுவது ஒரு நேர்மறை நடத்தை மாற்றத்தை உருவாக்கப்படுவதோடு, “இது அவர்களை வெட்கப்படுத்த அல்ல. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்குவதற்குதான் இந்த முயற்சி. நாங்கள் அவர்களுக்கு முதலில் மாலை அணிவிக்கிறோம். பின்னர், இந்த அணை தண்ணீரைதான் நாம் குடிநீராக பயன்படுத்துகிறோம் என்பதை விளக்குகின்றோம்” எனத் தகவல் கூறப்படுகின்றது.

2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வாழ்கின்ற இந்த மாவட்டத்தில், இந்த ஆண்டுக்குள் 40 ஆயிரம் தனிப்பட்ட கழிவறைகளை கட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 39 ஆயிரம் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. திறந்தவெளியில் இத்தகைய காரியங்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்க கரீம் நகர் நகராட்சி தீர்மானம் கூட நிறைவேற்றியது.

ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு மேற்கொண்டு. காவல்துறை அவர்களின் பங்களிப்பை வழங்குவதாக அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

மனித உரிமை ஆர்வலரான வி. சுதாகர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில். “திறந்தவெளியில் மலம் கழிப்பது தொடர்பாக, இந்த மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்க ஏன் வருகிறார்கள் என்று அதிகாரிகள் முழுமையாக புலனாய்வு செய்ய வேண்டும். இந்த அதிகாரிகள் முதலில் சமூக கழிவறை ஒன்றை கட்டிய பின்னர் அறிவுரை அமர்வுகளை நடத்தலாம்” என்று கூறியுள்ளார்.

திறந்தவெளியில் மலம் கழித்து இனம்காணப்படுவோரை, பொதுவாக பெயரை கூறி அடையாளப்படுத்தப்படுவதும், அவர்களை வெட்கமடைய செய்வதும் இந்தியாவில் ஒரு விவாத அம்சமாகவே உள்ளது. இதுபோன்று பல சம்பவங்கள் இந்த நாட்டில் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் இப்படி ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.